இந்த கவிதை எனுடயதல்ல ! நான் படித்ததில் பிடித்தது
( http://eluthu.com/kavithai/122696.html )
ஒழுக்கம் என்பது யாதெனில்
நாவடக்கம் முதல் தொடங்கி
மனதடக்கம் அதையும் சேர்த்து
உள்ளுணர்வும் வெளியுனர்வும்
ஒழுக்கமாய் பேணுதலே ...........
தீய செயல் செய்யாமல்
தீய எண்ணம் கொள்ளாமல்
தீய வார்த்தை உதிர்க்காமல்
தீயவரோடு சேராமல் .........
மனதளவில் தொடங்கி
உடலளவில் வரைக்கும்
கட்டுபாட்டிற்குள் கட்டுண்டு
கடமைதவராது வாழ்தல் .............
ஒழுக்கத்தை உயிராய் மதித்து
உணர்வுகளை நல்லதாய் விதைத்து
நற் சிந்தனைகளை மனதில் வளர்த்து
ஒழுக்கத்தோடு வாழ முயற்சி ........
தீயவரோடு கூட்டு சேர்ந்து
தீய பழக்கம் அதை வளர்த்து
நியாயமின்றி வாழும் வாழ்வை
இன்றோடு நிறுத்திவிடு ...........
வயதை மீறும் காம சிந்தனை
வரம்பு மீறும் அற்ப ஆசையை
அறிவாள் உணர்ந்து அதனை அடக்கி
ஒழுக்கம் பேணி உயிர் வாழ் ............
மனதை மயக்கும் மது பழக்கம்
உடல் கெடுக்கும் உணர்வை இழக்கும்
ஒழுக்கம் கெடுக்கும் மதியை குழப்பும்
நிலமையை உணர்ந்து நீயும்தேர் ............
புகையிலை பழக்கமும்
புகைக்கும் பழக்கமும்
ஒழுக்கும் குறைக்கும் பின்பு உயிரை குடிக்கும்
விழித்துக்கொண்டு வாழமுயலு.........
எப்படியோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம்
என்பது இல்லை மானிட வாழ்வு
தனிநபர் ஒழுக்கம் தலையாய கொண்டு
தரணியில் வாழ்வோம் ஒழுக்கம் போற்றுவோம்!
இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து ஒ ....
No comments:
Post a Comment