நம் காதல்



உன்னை பார்த்த நாள் என்னுள் 
உறங்கிகொண்டிருந்த காதல் குத்தாட்டம் போட்டது...

உன்னை எதிரில் பார்த்த நாட்களைவிட 
எதிலும் பார்த்த நாட்களே அதிகம் ...

நீ என் வாழ்வில் வீசியபின் என் 
மகிழம்பூ மனம் மகிழும்பூவானது ...


போதிமரத்தடில் ஞானம் பெற்றான் புத்தன் 
என் போதி மரமோ போதைமர மானது  உன் நினைவுகளில் ...

அடிக்கடி என் நினைவு வருகிறதா என்று கேட்டாய் 
அடிக்கு அடி உன் நினைவுதான்...

நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையிலும் 
என்னை அறியாமல் உன்னை சேர்கிறது காதல்..

என் கள்ளம் கபடமற்ற பார்வையில் 
கள்ளத்தனத்தை சேர்க்கிறது காதல்...!

உனக்கும் எனக்குமான சண்டையில் 
அதிகம் அழுதது காதல்தான்... 

நாம் பேசாத நாட்களில் 
மௌனவிரதமிருந்தது காதல் 

நமக்குள் இருக்கும் மௌனத்தையும் 
அழகாக நிரபிவிடுகிறது காதல் ...!

No comments:

Post a Comment

Image Sample for gayu klicks